ராசிபுரம் பகுதியில் ரூ.2.48 கோடி மதிப்பில் 253 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர், எம்பி., பங்கேற்பு

ராசிபுரம் பகுதியில் ரூ.2.48 கோடி மதிப்பில் 253 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர், எம்பி., பங்கேற்பு

ராசிபுரம் பகுதியில் ரூ.2.48 கோடி மதிப்பில் 253 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா - அமைச்சர் எம்பி பங்கேற்பு

ராசிபுரம் பகுதியில் ரூ.2.48 கோடி மதிப்பில் 253 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா - அமைச்சர் எம்பி பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் ரூ.2.48 கோடி மதிப்பில் 253 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, 9 மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்மான வசதியுடன் கூடிய கட்டில் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் நடைபெற்ற விழாவில் நாமக்கல் எம்பி., ஏ.கே.பி.சின்ராஜ் முன்னிலை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி.,ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டா உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பேசியது: திமுக ஆட்சியில் பெண்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தான் முதலில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது. தற்போது பெண்களின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம், மகளிருக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம், அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவிகிதம் இட ஒதுக்கீடு, உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு, கைபெண்களுக்கு உதவித்தொகைத்திட்டம், திருமணம் ஆகாத 50 வயது கடந்த பெண்களுக்கு உதவித்தொகைத்திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போதமலை மக்களின் கோரிக்கை ஏற்று ரூ.140 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ தொலைவிற்கு போதமலைக்கு சாலை அமைக்கும் பணி, ராசிபுரத்திற்கு ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டடம் உள்ளிட்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுளது. மேலும், பட்டா பெறுவதில் பொதுமக்களுக்கு இருக்கும் சிரமங்களை போக்கிட நத்தம் பட்டாக்களையும் இணைய வழியில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்களை நேரடியாக அணுகி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில், 13 துறைகளை உள்ளடக்கி மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் யாரும் செய்தாக பல்வேறு திட்டங்களை கடந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர். இன்றைய தினம் 253 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 14,750 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ராசிபுரத்திற்கு மட்டும் 3500 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, பிள்ளாநல்லூரில் மாற்றுத்திறனாளி விக்னேஷ் இல்லத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப உரிமை நிதியிலிருந்து ரூ.38,500/- மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டில், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50,000/- உதவித்தொகையினை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கவிதா சங்கர், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்த்தீபன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம், ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story