நாமக்கல்லில் ஒரு ரோஜா பூ இவ்வளவு ரேட்டா?

காதலர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ரோஜாக்கள்!
காதலர் தினத்தையொட்டி நாமக்கல் பூ மார்க்கெட்டில் விதவிதமான ரோஜா பூக்கள் விற்பனை காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். பரிசு பொருட்களை பரிமாறி கொள்ளும்போது அதனுடன் ரோஜா பூவையும் சேர்த்து கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள். பரிசு பொருட்கள் கொடுக்க முடியாமல் இருந்தாலும் காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. இதையடுத்து காதலர்தின ஸ்பெஷல் ரோஜா பூக்கள் நாமக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரோஜா பூக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து பட்டர்ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, காஷ்மீர் ரோஜா என பல வகைகளிலும், பல வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. சில்லரை வியாபாரிகள் ஒரு ரோஜா பூ ரூ. 30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மற்ற நாட்களில் ஒரு ரோஜா பூ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story