தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக செல்லும் ஹூப்ளி- ராமேஸ்வரம் ரெயில் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு !

 ரெயில் சேவை 

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது, இந்த ரெயிலின் சேவை காலம் வருகிற டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரெயில் (07355) சேவை காலம் டிசம்பர் மாதம் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ராமேஸ்வரம்- ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (07356) சேவை டிசம்பர் மாதம் 29-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story