செங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பழைய பேருந்து நிலையத்தில் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு நகரத் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் அடக்குமுறை மேலும் அதிகரித்துள்ளது.. 10 ஆண்டுகளில் 400 படகுகள்,3179 மீனவர்கள்,இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.. இந்த நிலையில் தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடி அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


