டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது

திருவண்ணாமலை:- திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்/மகளிர் திட்டம் சார்பாக டாக்டர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22.12.2023 வெள்ளிக்கிழமை அன்று செய்யாறு, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (Government Polytechnic College) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமின் சிறப்பம்சங்கள் 100-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 5000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டு பதிவு, தொழிற்பழகுநர் பயிற்சி பதிவு, மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு. பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், நர்சிங், பார்மசி மற்றும் பொறியியல் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story