ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தையில் விற்பனை அமோகம்

ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தையில் விற்பனை அமோகம்

மாட்டு சந்தையில் குவிந்த மாடுகள்

ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தையில் விற்பனை அமோகம் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் நகராட்சி மாட்டுச்சந்தை வாரந்தோறும் ஞாயிறு மாலை தொடங்கி இரவு வரை நடக்கிறது. திண்டுக்கல், பொள்ளாச்சி, மணப்பாறை, காங்கேயம் பகுதிகளில் இருந்து கறவை மாடுகள், கன்றுகுட்டிகள், அடிமாடுகள் என இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாடுகள் விற்பனைக்கு வந்தது.

பசுமாட்டின் கன்று குட்டிகளை வளர்ப்புக்காக விவசாயிகள் அதிகமாக வாங்கி சென்றனர். கன்று குட்டிகள் ரூ.55 ஆயிரம் வரை விற்பனையானது. அடி மாடுகளை கேரள வியாபாரிகள் இறைச்சிக்காக வாங்கினர். ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனையானதாக வியாபரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story