மேட்டூரில் ராட்சதக் குடிநீர் குழாயில் உடைப்பு

மேட்டூரில் ராட்சதக் குடிநீர் குழாயில் உடைப்பு

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் 

சேலம் மாவட்டம், மேட்டூரில் ராட்சத கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைக்கப்பட்டது.

மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடையாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு நாளொன்றுக்கு 2.8 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

காடையாம்பட்டி கூட்டு குடி நீர் திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை அனல் மின்நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்தால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீனாக சாலையில் தண்ணீர் வெள்ளம் ஓடியது. ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது.

இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. குடிநீர் குழாயில் உடைப்பு காரணமாக காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியாகம் பாதிக்கப்பட்டது . தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டாரை ஆப் செய்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர்.

Tags

Next Story