திருப்பத்தூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி

திருப்பத்தூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

திருப்பத்தூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இன்று போதைபொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரம் கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை திருப்பத்தூர் நகரம்,ஒன்றியம்,கந்திலி ஒன்றிய அதிமுக சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இடையூராக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்தே சென்று போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

அப்போது திருப்பத்தூர் நகர கழக செயலாளர் டி.டி.குமார், திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் நாகேந்திரன்,திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர்கள் டாக்டர்.திருப்பதி,செல்வம்,கந்திலி ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,மாவட்ட,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story