ஈரோட்டில் மனித சங்கிலி ஊர்வலம்

ஈரோட்டில் மனித சங்கிலி ஊர்வலம்

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை மற்றும் நந்தா நர்சிங் கல்லூரி மற்றும் ஸ்ரீவெங்கடேஷ்வரா காலேஜ் ஆஃப் பாராமெடிக்கல் அண்ட் அலைடு ஹெல்த் சயின்ஸ் மாணவ, மாணவியர்கள் இணைந்து உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது.

இதனை டாக்டர் CK சரஸ்வதி MLA, மற்றும் டாக்டர் L M ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது குறித்து தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜய் குமார் கூறியதாவது. "2020ம் ஆண்டில், உலகளவில் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2020ம் ஆண்டில் 80.0 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது. 2040ல் 111.8 மில்லியனாகவும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 90% மேற்பட்டோருக்கு இந்நோய் பற்றி தெரிவதில்லை. ஆரம்பநிலையில் இந்நோய் உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் பார்வை பறிபோவதைத் தடுக்கலாம்.

இந்த நோயால் 40 வயதிற்கு மேற்பட்டோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் 40 வயதிற்கு மேற்பட்டோர் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம். ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனையில் பொதுமக்களின் கண் நலனுக்காக மார்ச் மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் இங்கு உலகத்தரம் வாய்ந்த லாசிக் (ஸ்மைல்) மற்றும் அதி நவீன துல்லிய கண்புரை அறுவை சிகிச்சை (LRCS) அறிமுகப்படுத்த பட்டுள்ளது." என்றார்.

இந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அபிராம சுந்தரி, சக்தி ராஜேஸ்வரி, மஞ்சுளா மற்றும் மேனேஜர் கிஷோர் மார்க்கெட்டிங் மேனேஜர் கோவிந்த், பாபு மற்றும் ரமேஷ் மற்றும் தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பேராசிரியர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story