திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

  திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் தமிழகம் போதைப்பொருட்களின் தலைநகரமாக மாறி வருகிறது என எஸ்.பி.வேலுமணி பேசினார். 

திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் தமிழகம் போதைப்பொருட்களின் தலைநகரமாக மாறி வருகிறது என எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை:தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசை கண்டித்து கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த மனித சங்கிலி போராட்டத்தில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் கல்யாண சுந்தரம் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மனித சங்கிலி போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி கொண்டு இருக்கின்றது எனவும் இதை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் தமிழகத்தை காப்பாற்ற மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

அதிமுக மட்டும்தான் தமிழக மக்களுக்காக போராடும் இயக்கம் என தெரிவித்த அவர் சட்டமன்றத்தில் போதை பொருள் இருக்க கூடாது சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும் என இரண்டரை மணிநேரம் எடப்பாடியார் பேசினார் என்பதை சுட்டிகாட்டினார்.போதை பொருள் 2000 கோடி அளவிற்கு பிடிக்கப்பட்டிள்ளது எனவும் சமீபத்தில் ராமேஸ்வரத்திலும் 200 கோடி அளவிற்கு பிடித்து இருக்கின்றனர் என தெரிவித்தவர்தமிழகத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது என தெரிவித்தார்.கோவை புறநகர் பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது எனவும் இதை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் வருகின்றது எனவும் தற்போதைய கோவை எம்.பியை யாராவது பார்த்து இருக்கீங்களா? என கேள்வி எழுப்பிய அவர் உள்ளாட்சி தேர்தலில் கொலுசு கொடுத்து ஏமாற்றியதை போல திமுகவினர் வருவார்கள் எனவும் மக்கள் ஏமாந்து விடக் கூடாது எனவும் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமை சொல்லும் நபர்களை வெற்றியடைய செய்ய வேண்டும் என தெரிவித்த அவர் எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வருவார் எனவும் தெரிவித்தார்

. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிக்கொண்டிருந்த போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பொழுது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.பேசிக் கொண்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்கு இடையூறு ஏற்படுவதைப் போல இருந்த நிலையில் டிராபிக்கை சரி செய்த போலீசாரை பார்த்து டிராபிக்கை செய்வதை போல நடிக்கின்றீர்களா? திமுகவிற்கு எதிராக பேசக்கூடாதா என காவல் துறையிடம் வேலுமணி அதிருப்தியை காட்டமாக வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர் 2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப் பொருள் கைப்பற்ற பட்டுள்ளது எனவும் திமுக பொறுப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் துளியும் போதைப் பொருள் இல்லாமல் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மனிதசங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது என தெரிவித்தார்.

பள்ளி,கல்லூரி மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டு இருப்பதை தடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு இதை புரிந்து கொண்டு தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.திமுக ஆட்சியில் கோவையில் எந்த வளர்ச்சியும் இல்லை எனவும் சட்டம் ஒழுங்கு சரியில்லை,குடிநீர் பிரச்சனை இருக்கிறது என தெரிவித்தவர் மாணவர் சமுதாயம் சீர்கெட்டு கொண்டு இருப்பதால் இந்த போராட்டத்தை எடப்பாடியார் முன்னெடுத்துள்ளார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Tags

Next Story