திட்டச்சேரியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

திட்டச்சேரியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

மனித சங்கிலி போராட்டம்

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டச்சேரியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர்.போராட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் ஆசைமணி தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன்,மாவட்ட துணை செயலாளர் அபுசாலிஹ்,தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி,மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக திட்டச்சேரி நகர செயலாளர் ஷேக் அப்துல் பாசித் வரவேற்றார்.போராட்டத்தில் தி.மு.க அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதை கண்டித்தும், தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கும்,போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதையும் கண்டித்து போராட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்சந்தர்,ஒன்றிய துணை செயலாளர் திருமேனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் நகர துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story