திருப்பூரில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
உலகம் முழுவதிற்கும் தேவையான போதைப் பொருட்கள் சப்ளை செய்வதில் தமிழகம் தலைநகராக விளங்கி கொண்டிருக்கிறது - போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், கோல்டன் நகரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி. போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கலி போராட்டம் நடந்தது.
இதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், கோல்டன் நகரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,உலகம் முழுவதிற்கும் தேவையான போதைப் பொருட்கள் சப்ளை செய்வதில் தமிழகம் தலைநகராக விளங்கி கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிற்கும் தேவையான போதைப் பொருட்கள் சப்ளை செய்வதில் தமிழகம் தலைநகராக விளங்கி கொண்டிருக்கிறது. கடிகாரம் செய்ய ஸ்விட்சர்லாந்த் சிறந்து விளங்குவது போல, போதைப் பொருட்கள் வினியோகம் செய்வதில் தமிழகம் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது. தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாறி, இளைஞர்கள் எதிர்காலத்தை சீரழித்து கொண்டிருக்கிறது. தமிழக போலீஸ் பல்வேறு போதைப் பொருட்களை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியிலே அது நடக்காது.
போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை மத்திய அரசு விரைவில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். திமுக ஆட்சி காலங்களில் வன்முறை, மதக்கலவரம், நிலம் அபகரிப்பு, சினிமாத்துறையில் தலையீடு என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது தமிழகம் போதைப் பொருள் மாநிலமாக மாறியுள்ளது. இதனை மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி தடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள அதிமுக.,விற்கு வாக்களிக்க வேண்டும். சிலிண்டர் விலையை இன்னும் குறைக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு அதிமுக எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். அதிமுக.,வில் 2 கோடி தொண்டர்கள் ஆக்டிவ் ஆக உள்ளார்கள் என்றார்.