மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி
மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியிள் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பங்கேற்றார்.
அரியலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் நகரிலுள்ள மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் இன்று நடைப்பெற்றது இதில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் நமது உரிமைகள் பாதிக்கபடும் போது சட்டத்தின் மூலம் அதற்கான தீர்வு காணலாம் என தெரிவித்தார்.
மேலும் சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் அனைத்து சட்டஉதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கபடும் என தெரிவித்தார். இதில் சட்டபணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள், 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story