விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
 மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் தலைமையில் போலீசாரும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அமைச்சுப்பணியாளர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பட்ட மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்துகொள்வேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக் கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன், என்னுடைய எண்ணம், சொல், செயல் மூலம், பிறருடைய மனித உரி மைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறை முகமாகவோ செய்யமாட்டேன், மனித உரிமைகளை மேம்படுத்துவ தற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், ரங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story