மனித உரிமைகள் நாள்: உறுதி மொழி ஏற்பு

மனித உரிமைகள் நாளை ஓட்டி உறுதி மொழி ஏற்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்தலைமையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில்செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன்.

எவ்வித வேறுபாடுமின்றி அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம்.பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யமாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு நான் எப்போதும் ஆயுத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.

மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M. சிவனுபாண்டியன் மாவட்டதலைமையகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .R.சௌந்தரராஜன் மற்றும் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M. பழனி உடன் இருந்தார்.

Tags

Next Story