சாலையில் திறந்திவிடப்படும் மனித கழிவுகள்- சுகாதார சீர்கெட்டால் அவதிப்படும் பொதுமக்கள்

சாலையில் திறந்திவிடப்படும் மனித கழிவுகள்- சுகாதார சீர்கெட்டால் அவதிப்படும் பொதுமக்கள்

சாலையில் திறந்திவிடப்படும் மனித கழிவுகள்

திருப்பூரில் மனிதக்கழிவுகளை சாலை மற்றும் நொய்யலாற்றில் திறந்துவிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மனித கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்ற கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் கழிவு நீர் அகற்றும் பணியாளர்கள் வீடுகளில் சேகரிக்கும் கழிவுகளை சுத்திகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்ல நீண்ட தொலைவு சென்று வர தாமதமாகும் என்பதால் சாலை ஓரங்களிலும் நொய்யல் ஆற்றிலும் திறந்து விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்படுவதுடன் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

இன்று காலை இடுவம் பாளையம் அருகே மாநகராட்சியில் ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் சேகரித்த கழிவை சாலையோரம் வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சில நபர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வீடியோ பதிவு செய்தனர். இதனையடுத்து எந்த வித பதிலும் கூறாமல் வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஊழியர்களின் அலட்சிய போக்கை அதிகாரிகள் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story