மனித நேய வார நிறைவு விழா

மனித நேய வார நிறைவு விழா
மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
தென்காசி மாவட்டத்தில் நடந்த மனிதநேய வார நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மனித நேய வார நிறைவு விழா நடந்தது .விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்து சிறப்புரையாற்றி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலை குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், வருவாய் கோட்டாட்சியர் (தென்காசி) லாவண்யா, தனி வட்டாட்சியர்கள் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை)கண்ணன், பரிமளா, அரசு (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை வயலட், அரசு (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) மாணவர் விடுதி பட்டதாரிக் காப்பாளர்கள் ராதாகிருஷ்ணன்,தங்கராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் ஆசைத்தம்,சங்கர், செய்திமக்கள் தொடாபு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிமற்றும் கல்லூரி விடுதி மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story