காவல் துறை சார்பில் மனிதநேய வார விழா
மனிதநேய வார விழா
காவல்துறை தலைவர், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள், சென்னை வழிக்காட்டுதலின்படியும், கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவுப்படியும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுத்தலின்படியும், கடலூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நெய்வேலி உட்கோட்டம் குள்ளஞ்சாவடி திருவேங்கிட திருமண மண்டபத்தில் கடலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் துணை கண்காணிப்பாளர் M. நாகராஜன் தலைமையில் மனிதநேய வார விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில், குறிஞ்சிபாடி வட்டாட்சியர் சுரேஷ்குமார், வழக்கறிஞர் திருமார்பன், அஸ்மா அறக்கட்டளை நிர்வாகி மௌலவ ராஜ் முஹம்மத் உமரி மன்பஈ, முனைவர் ராஜா, அரசு கலைக்கல்லூரி கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கவிதாயினி வெற்றிசெல்வி, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளர் தீபா, குள்ளஞ்சாவடி காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாண்டிசெல்வி, புள்ளியல் ஆய்வாளர் ச. ரவிசங்கர் ஆகியோர்கள் மனிதநேயம் பற்றியும், உதவி என்று வருவோர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும், சாதி மத வேறுபாடியின்றி அனைவரையும் மனிதநேயத்துடன் அணுக வேண்டுமென்றும், பிறருக்கு உபத்திரம் செய்யாமல் இருப்பதும் மனிதநேயமாகும் என்ற கருத்துரைகளை எடுத்து கூறினார்கள்.