நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம் !

நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம் !

நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 

சத்தியமங்கலத்தில் தாலுக்கா அலுவலகத்தை நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தி தாலுக்கா அலுவலகத்தை நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் சத்தியில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் 3500க்கும் மேற்பட்டோர் தாலுக்க ஆபிஸ் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியில் நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் சுமார் 3500க்கும் மேற்பட்டோர் தாலுக்கா ஆபிஸ் முன் குவிந்தனர். தாலுக்கா ஆபிஸை முற்றுகையிட்டு வேலை கொடு, வேலை கொடுக்க முடியாவிட்டால் நிவாரணம் கொடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமை தாங்கினார். போராட்ட குழுவினருடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மற்ற மாவட்டங்களில் அதிகளவில் தொழிலார்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மிகவும் குறைந்த அளவில் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கபட்டுள்ளது.

எனவே தொழிலாளர்களுக்கு வேலை கொடுங்கள் கொடுக்க முடியவில்லை என்றால் நிவாரணம கொடுங்கள் என போராட்ட குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் வரும் 10 நாட்களில் வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்கிறோம். உயர் அதிகாரிகளிடம் பேசி நிவரணம் கொடுப்பது குறித்து தெரிவிப்பதாகவும் அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து சுமார் 3 மணி நேரமாக நடை பெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags

Next Story