புதுக்கோட்டையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்து தாலுகாவிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை தாசில்தார் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு பதவி உயர்வை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டு காலமாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அனைத்து தாலுகாவிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது இதில் நூற்றுக்கு மேற்பட்ட வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கலந்து கொண்டு அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி உண்ணாவிரத போராட்டமானது நடத்தி வருகின்றனர் இதன் பிறகும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால் வரும் 22ஆம் தேதி பணிகளைப் புறக்கணித்து அலுவலக வாயில்களிலும் தொடர் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என்றும் வரும் 27ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story