வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்!

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்!

திருப்பத்தூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

திருப்பத்தூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் ஓய்வு அறை முன்பு திருப்பத்துர் மாவட்ட தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் முக்கிய கோரிக்கைகளாக துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணை உடனே வெளியிட வேண்டும் இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story