தடை தாண்டும் போட்டி: திருப்பூர் மாணவி சாதனை

லக்னோவில் நடந்த தேசியளவிலான தடை தாண்டும் போட்டியில், திரூப்பூர் அரசுப்பள்ளி மாணவி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

லக்னோவில் நடந்த தேசியளவிலான தடை தாண்டும் போட்டியில், திரூப்பூர் அரசுப்பள்ளி மாணவி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

திருப்பூர் சோளிபாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜ் -- விமாலா தம்பதியினர். தேவராஜ் கால் டாக்சி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மகள் மெகிடா எபி அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தடை தாண்டுதல் விளையாடில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த இரண்டு வருடங்களாக எடுத்துக்கொண்ட கடின முயற்சியால், மாவட்டம் அளவில் , தமிழக அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வெற்ற மாணவி. கடந்த டிசம்பர் மாதம் 16 முதல் 20 ந் தேதி வரை தேசிய அளவில் லக்னோவில் நடைபெற்ற தடகள் போட்டியில், பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் 14 வயது பிரிவில் 800 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் கலந்து கொண்டு 2 வது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார்.

இதனிடையே வெற்றி பெற்ற மாணவியை கெளரவிக்கும்விதமாக அரசு பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், சார்பில் வேலம்பாளையம் சாலையிலிருந்து அரசு பள்ளி வரை வாகனம் மூலம் பேரணியாக அழைத்து வந்து பள்ளியில் வைத்து ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags

Next Story