போதையில் மனைவிடம் தகராறு செய்த - கணவன் கைது

போதையில் மனைவிடம் தகராறு செய்த - கணவன் கைது
X

 கைது

வாசுதேவநல்லூர் அருகே போதையில் மனைவிடம் தகராறு செய்த - கணவன் கைது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே கொத்தடப்பட்டியைச் சேர்ந்த தம்பதி அய்யனார், வாசுகி. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதை தொடர்ந்து பெரியவர்களின் மத்தியஸ்தத்தால் சேர்ந்தனர். இந்நிலையில், அய்யனார் போதையில் மீண்டும் தகராறு செய்ததால் வாசுகி தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து நேற்று அங்கு சென்ற அய்யனார், வாசுகிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த மனைவி புகாரில் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story