வாணியம்பாடி அருகே கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்திய கணவன் கைது

வாணியம்பாடி அருகே கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்திய கணவன் கைது

சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி

வாணியம்பாடி: வீரராகவலசை பகுதியில் மது போதையில் கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்திய கணவன் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர் பகுதி வீரராகவ வலசை பகுதியை சேர்ந்த விஜயகுமார் இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

விஜயகுமார் அடிக்கடி மது போதைகள் அவரது மனைவியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சுபாஷினி மற்றும் அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளனர் இதைக் குறித்து காவல்துறையினர் இருதரப்பினரும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

மீண்டும் விஜய்குமார் மது போதை உச்சத்தில் மீண்டும் அவரது மனைவியிடம் தகராரில் ஈடுபட்டு கத்தியால் 4 மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் கை, கால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார் அப்பதி மக்கள் சுபாஷ்னியை மீட்டுவாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து காவலூர் போலீசார் குடிபோதையில் இருந்த விஜயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story