பேராசிரியை வீட்டுக்கு தீ வைத்த கணவர் கைது.

பேராசிரியை வீட்டுக்கு தீ வைத்த கணவர் கைது.

பேராசிரியை வீட்டுக்கு தீ வைப்பு 

கருங்கல் அருகே குடும்பத்த தகராறில் பேராசிரியை வீட்டிற்கு தீ வைத்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கினாவிளை இனம்பாறவிளையை சேர்ந்தவர் அருள்பிரபு. இவருடைய மனைவி ஆட்லின் ஜினா.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆட்லின் ஜினா ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆட்லின் ஜினா இனம்பாறவிளையில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று காலையில் ஆலயத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போதுவீட்டின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சோபா செட் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் குளச்சல் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்.

இதுபற்றி ஆட்லின் ஜினா கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அருள்பிரபு வீட்டுக்கு தீவைத்து விட்டு தலை மறைவானது தெரியவந்தது. அதன்பேரில் அருள்பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாகி இருந்த அருள்பிரபுவை கருங்கல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story