மனைவியை கொலை செய்ய முயற்சி கணவன் கைது

மனைவியை கொலை செய்ய முயற்சி கணவன் கைது
கைதானவர்
சங்ககிரி அருகே குடும்ப தகராறு பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்ய முயற்சி கணவனை காவல்துறையினர்

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு.... சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி மேற்கு ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (38) என்பவருக்கும் அரசிராமணி பழக்காரன்காடு பகுதியைச் சேர்ந்த நீலவேணி (34) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் ரமேஷ் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் அடிக்கடி குடித்துவிட்டு கணவன்,மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீலவேணி கணவனை பிரிந்த இரண்டு குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே நீலவேணிக்கும் அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அறிந்த ரமேஷ் தனது மனைவியுடன் குடும்பம் நடத்தும் இளைஞரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தவர். வழக்கம்போல் நேற்று இரவு குடிபோதையில் மனைவியின் தாயார் வீட்டிற்கு கத்தியுடன் வந்த ரமேஷ் மனைவி நீலவேணியை கொலை செய்வதற்காக முயற்சித்துள்ளார். அப்பொழுது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் இதுகுறித்து மனைவி நீலவேணி தேவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Read MoreRead Less
Next Story