பரமத்தி வேலூர்: குடும்ப பிரச்னை - கணவன் தற்கொலை

பரமத்தி வேலூர்: குடும்ப பிரச்னை - கணவன் தற்கொலை

கோப்பு படம்

பரமத்தி வேலூர் பாண்டமங்கலம் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தூக்கு போட்டு மற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (40) லாரி டிரைவர். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு சசிதரன் என்ற ஒரு மகன் உள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணிக்கும் மனைவி விஜயாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மனைவியை விட்டு பிரிந்ததால் மனமடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது தந்தை சண்முகம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது அட்டை வீட்டின் மேற்கூரையில் உள்ள கம்பியில் வேஷ்டியால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்பிரமணி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story