மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கணவர்  தற்கொலை

கணவர் தற்கொலை

தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்தவர் பேச்சி மகன் கருப்பசாமி (38). இவர் அங்குள்ள உப்பளத்தில் கண்காணியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அவரது மனைவி குழந்தைகளுடன் அவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டாராம். மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் இருந்த கருப்பசாமி நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story