மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை

தற்கொலை

தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்தவர் அப்துல் கனி மகன் அஷ்ரப் அலி (35), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக அவரது மனைவி குழந்தையுடன் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் மனவேதனையில் இருந்த அஷ்ரப் அலி, புதிய துறைமுகம் கடற்கரையில் சுற்றுலா மாளிகை அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story