மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை
தற்கொலை
தர்மபுரி மாவட்டம், பிக்கிலி கிராமத்தில் மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவருக்கு திருமணம் முடிந்து 2 மகன்கள் உள்ளனர். கிருஷ்ணன் கோழி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து மனைவியின் இறப்பு தாங்காமல் மீளா துயரத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று மனவிரக்தியடைந்த கிருஷ்ணன் லுங்கியால் தூக்குகோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story