மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை
தற்கொலை
தர்மபுரி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, காரிமங்கலம் அருகே கெண்டிக்கான அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகின்றார் இவரது மனைவி விக்னேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில். விக்னேஸ்வரி அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், விக்னேஸ்வரி கணவரிடம் கோபம் கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளு டன் சென்று விட்டார். இதனால், மனவேதனையில் இருந்து வந்த ஞானப்பிரகாஷ் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரிமங்க லம் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story