மனைவி கோபித்து சென்றதால் கணவர் தற்கொலை

மனைவி கோபித்து சென்றதால் கணவர் தற்கொலை

தற்கொலை 

மேல ஓகை கிராமத்தில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் மனம் உடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் அருகே மேல ஓகை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 36. இவருக்கு சசிகலா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் . இந்நிலையில் கணவன், மனைவி தகராறு காரணமாக மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் வேடம்பூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் மனம் உடைந்த சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை.

Tags

Next Story