மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை
காவல்துறை விசாரணை
சிவகங்கை அருகே மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
சிவகங்கை அருகே உள்ள பில்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் அயோத்தி ராமன். இவருக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சிவகங்கை பகுதியில் உள்ள தனியார் லாரி சர்வீஸில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மது போதைக்கு அடிமையானவர் என கூறப்படும் நிலையில், வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படும் நிலையில் அவரது மனைவி அதனை கண்டித்துள்ளார். இதனால் மனம் வெறுத்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் குறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
Next Story