மாமியார் தாக்கு: மருமகள் மீது வழக்கு

X
விசாரணை
மாமியார் தாக்க்கப்பட்ட விவகாரத்தில் மருமகள் மீது வழக்கு
சின்னசேலம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி பார்வதி, 43; இவர், தனது மகன் முத்துகருப்பனுக்கு வேறொரு நபரிடமிருந்து கடனாக பணம் வாங்கி கொடுத்துள்ளார். கடந்த 13ம் தேதி பாண்டியங்குப்பத்தில் உள்ள தனது மகன் முத்துகருப்பனிடம் பணத்தை கேட்கச் சென்றார். அப்போது வீட்டிலிருந்த மருமகள் சிவகாமியிடம் பணத்தைக் கேட்டுள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் சிவகாமி மற்றும் இவரது பிள்ளைகள் வீரமணி, கவுசல்யா ஆகியோர் பார்வதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பார்வதி கொடுத்த புகாரின் பேரில் முத்துகருப்பன், சிவகாமி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
