மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
திருச்சியில் மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஸ்டார் நகரை சேர்ந்தவர் ராஜ்கமல் (வயது 37). இவரது சென் மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா இறந்து விட்டார். இதனால் ராஜ்கமல் கடந்த 9 ஆண்டுகளாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story