மனைவி மாயம் - கணவர் புகார்
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் பகுதியில் மனைவியை காணவில்லை என கணவர் புகார் அளித்துள்ளார்.
பொன்னமராவதி அருகே காரையூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி கல்யாணி (24). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 8 மற்றும் 5 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 27ந் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டுச்சென்ற கல்யாணி வீடு திரும்பவில்லை. பல்வேறு பகுதியில் தேடி பார்த்தும் கல் யாணி கிடைக்காததால் கணவர் புகழேந்தி அளித்த புகாரின்பேரில் காரையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
Next Story