மனைவி மாயம் - கணவர் போலீசில் புகார்
மாயம்
கள்ளகுறிச்சி மாவட்டம், சந்தைப்பேட்டை அருகே கடைக்கு செல்வதாக கூறி சென்ற மனைவி காணவில்லை என கணவன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சாந்தகுமார் மனைவி உமா( 25 )இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1ம் தேதி காலை 11:00 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற உமா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சாந்தகுமார் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story