கணவன் மாயம் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை

கணவன் மாயம் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை

காவல்துறை விசாரணை


நல்லம்பள்ளி அருகே உள்ள தோக்கம்பட்டி பகுதியில் சேர்ந்த தேவ் ஆனந்த் என்பவர் கணவன் மனைவி தகராறில் கோபித்துக் கொண்டு சென்றவர் வீடு திரும்பாததை அடுத்து அவரது மனைவி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி அடுத்த தோக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீபா, இவர் மீன்வளத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் தேவ் ஆனந்த் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தீபா, புது துணி எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தேவ் ஆனந்த், ஏற்கனவே வீட்டில் ஏராளமான துணிகள் உள்ளது. எதற்காக மேலும் புது துணி எடுத்து வந்தாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில், தேவ் ஆனந்த் கோபித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். மறுநாள் வீட்டிற்கு தேவ் ஆனந்த் வராததால், உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தீபா அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story