மனைவியின் நிர்வான போட்டோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர் !
வழக்கு
மனைவியின் நிர்வான போட்டோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர் மீது 3 பிரிவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு செந்திட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (23). இவரும் காரிப்பட்டி பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த மாதம் வீட்டிலிருந்து வெளியேறிய இளம்பெண், செந்திலை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஏற்காட்டிற்கு சென்று காதல் கணவனுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதியன்று தனது பெற்றோரை தொடர்பு கொண்ட இளம்பெண், தான் குப்பனூரில் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து பெற்றோர் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர், தனது காதல் கணவரான செந்தில், தன்னை நிர்வாணப்படுத்தி செல்போனில் போட்டோ எடுத்து அதனை அவரின் நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும், இதனால் அதிர்ச்சியடைந்து செந்திலுக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து காரிப்பட்டி போலீசில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், புதுமாப்பிள்ளை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் ஏற்காட்டில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
Next Story