டூவீலர் மீது கார் மோதி விபத்து

டூவீலர் மீது கார் மோதி விபத்து

கோப்பு படம்

ஏமூர் மேம்பாலம் அருகே டூவீலர் மீது கார் மோதியதில் கணவன் மனைவி படுகாயமடைந்தனர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, கருப்பம்பாளையம், ஏ.கே பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (44). இவரது மனைவி சுதா வயது (38). இவர்கள் இருவரும் டூவீலரில் ஜூன் 9ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் ஏமூர் மேம்பாலம் அருகே செல்லும்போது,அதே சாலையில், திருப்பூர் மாவட்டம், எல்லப்பாளையம் புதூர்,சாய் கார்டன் அவென்யூ பகுதியைச் சேர்ந்த தாமஸ் ராஜன் என்பவர், வேகமாக ஓட்டி வந்த கார், சசிகுமார் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நிலை குழைந்து டூவீலர் உடன் கீழே விழுந்ததில், கணவன்- மனைவி இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சசிகுமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story