கள்ளக் காதலியுடன் கணவர் ஆபாச வீடியோ மனைவி போலீசில் புகார்

கள்ளக் காதலியுடன் கணவர் ஆபாச வீடியோ மனைவி போலீசில் புகார்

கள்ளக் காதலியுடன் கணவர் ஆபாச வீடியோ மனைவி போலீசில் புகார்

நாகர்கோவிலில் கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்த கணவன்- இதனை அறிந்த மனைவி போலீசில் புகார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த (33) வயது வாலிபர் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள மொபைல் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். அதே கடையில் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணும் வேலை பார்த்து வந்தார். ஒரே கடையில் வேலை பார்த்தால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இது இளம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததால் பிரச்சனை ஏற்பட்டு, அந்த இளம்பெண் தன் கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு வீட்டிலிருந்து வெளியேறினார். பின்னர் தாழக்குடியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் கள்ளக்காதலியை தங்க வைத்த வாலிபர் தன் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக குடும்ப நடத்தி வந்தார். இந்த நிலையில் கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்த போது அதை மொபைலில் வாலிபர் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் மனைவி பார்த்து விட்டார். இதை தட்டி கேட்ட மனைவியை தாக்கியதோடு ஆபாச வீடியோ பற்றி பேசினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இச்சம்பவம் குறித்து வாலிபர் மனைவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story