நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
உயர்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
அரியலூர், மே.9- ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 14 அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் உயர்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
பயிற்சியினை மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையேற்று துவக்கி வைத்தார். மீன்சுருட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் மோகன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தவிகுமார், வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி , ஆசிரியர் பயிற்றுனர்கள் குறிஞ்சிதேவி, அந்தோணி சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார்.
ஒவ்வொரு அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்தும் ,பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர், முன்னாள் மாணவர்கள், இல்லந்தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உட்பட ஒரு பள்ளிக்கு 12 பேர் வீதம் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 2023 24 கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் , நான் முதல்வன் திட்டத்தின் மூலம், உயர் கல்வி நிலையினை 100% அடைவதற்கான வழிகாட்டல் குறித்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பயிற்சியின் வழியாக தெரிவிக்கப்பட்டது.