உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது : சீறிய தங்கதமிழ் செல்வன்

உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது : சீறிய தங்கதமிழ் செல்வன்

தங்க தமிழ்ச்செல்வன்

உசிலம்பட்டிப் பகுதியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் வாக்குசேகரிக்க வராமலிருப்பது குறித்து கேள்வி கேட்ட நிருபரை பார்த்து உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.,நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் சூழலில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக சார்பில் தங்;கத்தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கப்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் 4க்கும் மேற்ப்பட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் .நடத்தி நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.ஆனால் இதுவரை பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கவில்லை.

அதிமுக அமமுக நா.த.கட்சி வேட்பாளர்கள் எல்லாம் உசிலம்பட்டி பகுதியில் பாதி பிரச்சாரத்தை முடித்துவிட்ட நிலையில் திமுக வேட்பாளரின் வாக்குசேகரிக்கும் நிகழ்ச்சி நிரல் குறித்து கட்சியினருக்கும் முறையாகத் தெரியவில்லை.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த வீரத்தியாகிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் திமுக சார்பில் மதுரை புறநகர் மாவட்டச்செயலாளர் மணிமாறன் தலைமையில் தேனி வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.பின் செய்தியாhளர்களிடம் தங்கதமிழ்செல்வன் பேசும் போது கச்சத்தீவு பிரச்சனையை தேர்தலுக்காக மத்திய அரசு பயன்படுத்தி வருகின்றது என குற்றம் சாட்டியவரிடம் இன்னும் மக்களிடம் வாக்கு சேகரிக்க வராமலிருப்பது குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்ப எந்த டிவிப்பா நீ டிடிவி தினகரன 4 ஊர்ல அடிச்சு விரட்டுனாங்க அத போட்டயா நீ.

கேட்கிற கேள்வியே தப்பு. உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கோபத்துடன் பேட்டியை பாதியிலேயே முடித்து கிளம்பி சென்றார்.

Tags

Read MoreRead Less
Next Story