சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?

சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?

மின்கம்பம்

சேதமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு கோரிக்கை
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மேட்டுத் தெருவில் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பத்தில் அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, மேல்பகுதியில் சிமென்ட் காரை உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பம் சாய்ந்து விழுந்து மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story