நான் ஆட்சிக்கு வந்தால், ஹோம் ஒர்க் டியூசன் எக்ஸாமுக்கு தடை : கார்த்தி சிதம்பரம்

நான் ஆட்சிக்கு வந்தால், ஹோம் ஒர்க் டியூசன் எக்ஸாமுக்கு தடை : கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

நான் ஆட்சிக்கு வந்தால், ஹோம் ஒர்க் டியூசன் எக்ஸாமுக்கு தடை விதிப்பேன் என கார்த்தி சிதம்பரம் பேசியது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் எம்பி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு வரவேற்பு அளித்த பெண்களுக்கு கைகுலுக்கி வாக்கு சேகரித்தார். பின்னர் வரும் நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல், இத்தேர்தல், வேட்பாளரை தேர்ந்தெடுப்பதை தாண்டி இந்தியா எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்றார். தொடர்ந்து, நான் ஆட்சிக்கு வந்தால், ஹோம் ஒர்க் டியூசன் எக்ஸாமுக்கு தடை விதிப்பேன் என்றார். இதனைக் கேட்ட அனைவரும் கைதட்டி சிரித்தனர். பின்னர் இனி தேர்தல் முடியும் வரை செல்போனில் பேசும் போது, யாரும் ஹலோ என்று பேசக்கூடாது கைச்சின்னம் என்று பேச தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் படி கல்வி கடன் ரத்து செய்யப்படும், 100 நாள் வேலைவாய்ப்பு ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறிய அவர், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்த இந்தியா கூட்டணி அமைய கைச்சினத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story