மக்களுக்குத் தேவையானதை நான் செய்வேன்- ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார்
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் சிவகாசி கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை.பாஜக தலைமையில் இருந்து தேர்ந்தெடுத்து என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். விருதுநகர் தொகுதி மக்களுக்கு செய்வதற்கு நிறைய உள்ளது . மக்களுக்கு தேவையானதை நான் செய்வேன்.
விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் தொகுதி மக்களுக்கு செயல்பாடு குறைவாக உள்ளது.விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் எனது மகளுடன் படித்த பையன், எனக்கும் ஒரு மகன் போலத்தான்,நடக்க இருக்க கூடிய தேர்தல் சட்டமன்றத் தேர்தல் அல்ல பாராளுமன்றத் தேர்தல் .நாடு இந்த தேர்தலில் நமக்காக என்ன செய்ய உள்ளது என்பதை தான் பார்க்க வேண்டும்.நல்ல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்,வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்,பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் தொழிலை மேம்படுத்த இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும், எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.இன்னும் நாங்கள் உழைக்க வேண்டும்.முன்னதாக பொதுமக்களிடம் உரையாற்றிய ராதிகா சரத்குமார்,பட்டாசு விபத்தில் இன்னும் ஒரு உயிரிழப்பு நிகழாமல் தடுத்து நிறுத்த பாடுபடுவேன் என தெரிவித்தார்.