இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவேன்

இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவேன்

இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவேன் என அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பேசினார்.


இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவேன் என அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பேசினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள மித்ரா வயல் கிராமத்தில் ஏழை விவசாயிகள் மற்றும் கூலி வேலை செய்பவர்கள் ஏராளம் அப்பகுதியில் உள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மது கடையால் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி, இளம் வயதிலேயே விபத்துகளில் இறந்து விடுவதாகவும், அதனால் அங்குள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ப. சிதம்பரத்திடம் அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து ப.சிதம்பரம் சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த மித்ரா வயல் கிராம பெண்கள் அப்பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற சிவகங்கை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் பணங்குடி சேவியர் தாசுக்கு ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். சேவியர் தாஸ், நான் கிராமத்தில் பிறந்தவன். சொன்ன வாக்குறுதியை காப்பாற்றுவேன். மதுவிலக்கை அமல்படுத்தவேன் என்று கூறி இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story