சிவகங்கையை மீட்டெடுப்பேன்: பாஜக வேட்பாளர்

சிவகங்கையை மீட்டெடுப்பேன்: பாஜக வேட்பாளர்

பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு 

சிவகங்கை தொகுதியை மீட்டெடுப்பேன் என பாஜக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேவநாதன் யாதவ் களம் இறக்கப்பட்டு போட்டியிடும் நிலையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சிவகங்கை அம்பேத்கர் சிலை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தேவநாதன் யாதவ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது 40 ஆண்டு காலமாக சிவகங்கை தொகுதி மீட்க முடியாமல் இருக்கிறது.

என்னை வெற்றி பெற செய்தால் சிவகங்கையை மீட்பேன் என பேசினார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story