வாகன விபத்தில் ஐஏஎஸ் அதிகாரியின் தந்தை உயிரிழப்பு

வாகன விபத்தில் ஐஏஎஸ் அதிகாரியின் தந்தை உயிரிழப்பு

முருகவனம்

வத்திராயிருப்பு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறப்பு திட்ட செயலாக்க துறை துணைச் செயலாளர் பிரதாப்பின் தந்தை உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் ஜெயசீலன், எஸ்பி சீனிவாச பெருமாள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பை சேர்ந்த விவசாயி முருகவனம்(54). இவரது மகன் பிரதாப் ஐஏஎஸ் சிறப்பு திட்ட செயலாக்க துறையில் துணைச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். முருகவனம் நேற்று இரவு விவசாய வேலைகளுக்கு ஆட்களை அமர்த்துவதற்காக கூமாபட்டி சென்று விட்டு தனது பைக்கில் வத்திராயிருப்பிற்கு திரும்பி கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் சேதுநாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பிச்சை அமர்ந்திருந்தார். வாகனம் மூலக்கரை அருகே வந்தபோது கூமாபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி மகேந்திரன் என்பவரது பைக் எதிரே வந்து மோதியது.

இதில் முருகவனம் பலத்த காயமடைந்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராஜபாளையம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த முருகவனத்தின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அதற்கு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உட்பட அதிகாரிகள், அனைத்து அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story