மாற்றுத்திறனாளிகள் 170 பேருக்கு அடையாள அட்டை !
மாற்றுத்திறனாளி
மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில், 170 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில், 170 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். எலும்பு முறிவு மருத்துவர் பரணிதரன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல மருத்துவர் பாக்கியராஜ், கண் மருத்துவர் லோகநாயகி, முடநீக்கியல் மருத்துவர் பிரபாகரன் ஆகியோர், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். முகாமில், 170 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Next Story